ஆனாலும் சிரஞ்சீவி முருகதாஸை விடுவதாக இல்லை. தனது அடுத்த படத்தை இயக்கும்படி முருகதாஸிடம் சொல்ல, அதற்கு சம்மதித்த முருகதாஸ் அவரை வைத்து இயக்கிய படம்தான் ஸ்டாலின். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில்தான் தற்போது சல்மான்கான் நடித்துவருகிறார்.
படத்திற்கு மெண்டல் என பெயர் வைத்திருக்கிறார்கள். பெயர்தான் அப்படி இருக்கிறதே தவிர படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சல்மான். ஹீரோயினாக டெய்சி ஷா நடிக்க, ஒருகாலத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடித்த தபு இந்தப்படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கிறார். நம்ம ‘சிலம்பாட்டம்’ சனாகான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை சல்மானின் தம்பியான சோகைல் கான் இயக்குகிறார்.