‘மேகா’ படத்தின் க்ளைமாக்ஸில் மாற்றம்..!


ஆகஸ்ட்-22ல் தான் படம் வெளியாகிறது என்றாலும் ‘மேகா’ படத்திற்கான சிறப்பு காட்சி கடந்த வாரமே பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படம் பார்த்த பலரும் படத்தில் இடம்பெற்ற சோகமான க்ளைமாக்ஸை மாற்றினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் ரிஷி, இந்தப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.கே சதீஸ் ஆகியோர் படத்தின் க்ளைமாக்ஸை சுபமானதாக மாற்றி அமைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் நாயகனாக அஸ்வினும் நாயகியாக சிருஷ்டியும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜாசிருஷ்டிஜே.எஸ்.கே சதீஸ்மேகா