“நயன்தாரா இல்லையென்றால் மாயா இல்லை” – எஸ்.ஆர்.பிரபு நன்றி..!

கடந்த வாரம் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படம் ரசிகர்களின் வரவேற்பு சிறிதும் குறையாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இது எதிர்பார்க்காத வெற்றி இல்லை.. முன்கூட்டியே எதிர்பார்த்த வெற்றிதான்.. காரணம் இயக்குனர் அஷ்வின் சரவணன் சொன்ன கதை மீது இருந்த நம்பிக்கையும் இந்த கதையை கேட்டதும் நயன்தாரா எந்த வித மறுப்பும் சொல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டதும் அப்போதே வெற்றியை உறுதி செய்துவிட்டனவாம்..

நேற்று நடைபெற்ற ‘மாயா’ பட வெற்றிச்சந்திப்பில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “மாயாவின் வெற்றி எனக்கு மிகபெரிய மகிழ்ச்சியையும், மன பலத்தையும் தந்துள்ளது. படத்தில் நயன்தாரா நடித்திருக்கவிட்டால் படம் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை” என நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் பேசும்போது, “இரண்டாம் பாகத்தை இவ்வாறு எடுக்கலாம் அவ்வாறு எடுக்கலாம் என்று புதுப்புதுகதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளை சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன் என்றார்.

ஆக இந்தப்படத்தை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெற்றிப்படத்துடன் தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளது.

அஷ்வின் சரவணன்எஸ்.ஆர்.பிரபுநயன்தாராபொடென்ஷியல் ஸ்டுடியோஸ்மாயா