‘மாவீரன் கிட்டு’ யார்..?

சுசீந்திரனின் புதிய படத்தில் அவருடன் மூன்றாவது முறையாக விஷ்ணு கூட்டணி சேர்ந்திருப்பது ஒரு ஆச்சர்யம் என்றால், அந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிப்பது இன்னொரு மிகப்பெரிய ஆச்சர்யம்.. அதுமட்டுமல்ல படத்திற்கு ‘மாவீரன் கிட்டு’ என டைட்டிலும் கூட கிடுகிடுக்க வைக்கிறது. இவ்வளவு கெத்தான டைட்டில் கேரக்டரில் நடிக்கப்போவது விஷ்ணுவா இல்லை பார்த்திபனா என்பது பற்றி இயக்குனர் குறிப்பிடவில்லை..

1985ல் நடைபெறும் கதை இது.. அந்த சமயத்தில் சமூக அநீதிகளுக்காக போராடிய ஒரு மனிதரை பற்றிய கதைதானே தவிர, இலங்கை தமிழர்கள் பற்றிய கதை இல்லை என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறார் இயக்குனர் சுசீந்திரன்.. விஷ்ணு ஜோடியாக மீண்டும் ஸ்ரீதிவ்யா இதில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.

Maveeran KittuParthibanSri DivyaSuseendhiranVishnu Vishal