தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர், குறிப்பாக “நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல” என சூர்யா பேசும் பஞ்ச் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்க வைத்துள்ளது.
தற்போது ஆடியோ ரிலீசுக்கான பணிகளில் முழு வீச்சாக இறங்கி வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சூர்யாவை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். வரும் மே-8ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.