நீண்ட நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்பு, சினிமா விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த யுவன்சங்கர் ராஜா, அதேபோல சமூக வலைதளங்கள் பக்கமும் வராமல் ஒதுங்கியிருந்தார். இப்போது விழாக்களுக்கு ஆரம்பித்திருப்பது போல மீண்டும் டிவிட்டரிலும் கரன்ட்டிற்கு வந்துவிட்டார்.
தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் ஆடியோ ரிலீசுக்கான பணிகளில் முழு வீச்சாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் யுவன். இதுபற்றி அவரது டிவிட்டர பக்கத்தில், “மாஸ் ஆடியோ இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கூடிய விரைவில் தெறிக்க விடுவோம்” என தகவல் பகிர்ந்துள்ளார்.