ஆச்சர்யம் தான்.. கடந்த மாதங்களில் நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரம், இப்போதோ நடிகர்சங்க நலத்திட்ட பணிகள் என மூச்சுமுட்டும் வேலைகளில் இருந்தாலும், சினிமா, சங்கம் என இரண்டு வேலைகளும் ஒன்றை ஒன்று பாதிக்காதவாறு பயணிக்கிறார் விஷால்.. அதனால் தான் பாண்டிராஜின் இயக்கத்தில் ‘கதகளி’ படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முடிந்ததும் தெரியவில்லை.
இதோ இப்போது குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் அடுத்து நடிக்கும் ‘மருது’ படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்தப்படத்திற்கு விஷால் டைட்டில் வைத்ததில் ஒரு சென்டிமென்ட் பின்னணியும் உண்டு..
விஷாலின் வெற்றிப்படமான ‘பாண்டியநாடு’ படத்தில் ‘ஏலே ஏலே மருது’ பாடல் படம் வெளியான நேரத்தில் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.. அந்த ஞாபகார்த்தமாகவும், அதே சமயம் இயக்குனர் முத்தையா தனது படங்களுக்கு பெயர் வைக்கும் பாணியில் இருந்து மாறாமலும் ‘மருது’ டைட்டில் கச்சிதமாக அமைந்துவிட்டது.