“எனக்கு வாய்ப்பு தருவதில்லை” – மனோபாலாவின் வருத்தம்..!

படம் முழுவதும் ஹீரோவுடன் ட்ராவல் பண்ணும் காமெடி நடிகர்களுக்குத்தான் சந்தானமா, சூரியா, இல்லை கருணாகரனா என இயக்குனர்கள் சீட்டு குலுக்கி போடுவார்கள்.. ஆனால் படத்தில் ஒரு சீன் வந்தாலும், நான்கு சீன் வந்தாலும் சரி, நகைச்சுவை நடிகர் மனோபாலாவிற்கு என்று ஒரு இடத்தை கர்ச்சீப் போடாத குறையாக பிடித்து வைத்துவிடுகிறார்கள்.

அதனால்தான் கடந்த வருடம் எண்பது படங்களில் மனோபாலாவால் நடிக்க முடிந்திருக்கிறது. இதற்கு மேலும் முடியும் தான்.. ஆனால் கால்ஷீட் இருந்தால் தானே என்கிற மனோபாலாவுக்கு இன்னொரு வருத்தமும் இருக்கிறது. அதாவது தான் தயாரிக்கும் படங்களின் இயக்குனர்கள் யாரும் தனக்கு வாய்ப்பு தருவதில்லை என ஆதங்கப்படுகிறார் மனோபாலா.

கருணாகரன்சந்தானம்சூரிமனோபாலா