சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த என்.ராகவன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் தான் ‘மஞ்சப்பை’. விமல் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
மஞ்சப்பை என்பதால் கிராமத்துக்கதையோ என நினைத்துவிட வேண்டாம். சென்னைக்கு மஞ்சப்பையுடன் பிழைப்பு தேடி வந்து, இங்கே வசிக்கும் மக்களைப் பற்றிய கதைதான். படத்திற்கு N R ரகுநந்தன் இசையமைக்கிறார்.
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை முதல்காப்பி அடிப்படையில் தயாரிக்கிறார் சற்குணம். இந்தப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் மே-16ஆம் தேதி மஞ்சப்பை திரைக்கு வருகிறது.