‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே… அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை ஒரு நடிகனாக அரிதாரம் பூசவைத்தது ரஜினிதான்.
மணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு அவரது குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர் ரஜினிதான். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜா தான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலாக ரஜினியை மரியாதையான ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டினார் மணிவண்ணன்