திருமண பந்தத்தில் நுழைந்தார் மனிஷா யாதவ்..!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ்சினிமாவில் நுழைந்தவர் மனிஷா யாதவ்.. அதன்பின் தமிழ் சினிமாவில் அவருக்கு கிடைக்க வேண்டிய வேடங்கள் சரியான நேரத்தில் கிடைத்தே வந்தன. சமீபத்தில் வெளியான ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு ஆடியிருந்தார் மனிஷா.

இந்தநிலையில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வர்னித் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் மனிஷா. மனிஷாவும் வர்னித்தும் ஏழு வருடம் காதலித்து தற்போது தங்களது காதலை வெற்றிகரமாக திருமண வாழ்க்கைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.. நமது behind frames சார்பாக மணமக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Manisha Yadavசென்னை 28 2சொப்பன சுந்தரிபாலாஜி சக்திவேல்மனிஷா யாதவ்வர்னித்வழக்கு எண் 18/9