உடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி

ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் ‘சாகாவரம்’ இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.

விழாவில் நடிகர் சாருஹாசன் அவரின் மனைவி கோமளம் சாருஹாசன், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகிய நால்வரும் உடல் தானம் செய்வதாக இவ்விழாவின் போது அறிவித்தனர். விழாவில் நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு பாக்யராஜ், சினேகா, சுஹாசினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குனர்கள் பார்த்திபன், வசந்த் சாய், சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ManirathnamSuhashiniகோமளம் சாருஹாசன்சரண்சாந்தனு பாக்யராஜ்சினேகாசுஹாசினிபரத்வாஜ்பார்த்திபன்பிரசன்னாமணிரத்னம்லக்ஷ்மி ராமகிருஷ்ணன்வசந்த் சாய்