“மணிரத்தினத்துக்கு பிடிச்ச நடிகை ஸ்ரீபிரியா” – சுஹாசினி

‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன், கே.பாலசந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுஹாசினி, “என்னோட சின்ன வயசில ஸ்ரீபிரியா படங்களை தான் நான் அதிகம் பார்ப்பேன். அவங்களோட டான்ஸ், ஸ்டைலா அவங்க போடும் ட்ரெஸ் இது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை விட என் கணவர் மணிரத்னம் ஸ்ரீபிரியாவை பற்றி அடிக்கடி பேசுவார். ஒரு நடிகன்னா ஸ்ரீபிரியா மாதிரிதான் இருக்கனும். அவங்கள மாதிரி தான் ட்ரெஸ் பண்ணனும்னு சொல்லிகிட்டே இருப்பார். இன்னிக்கி அவங்க இந்த படத்தை டைரக்ட் பண்ணியிருப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று பேசினார்.

படத்தின் பாடலை கமல் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார், ட்ரெயிலரை கே.பாலசந்தர் வெளியிட விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.

சுஹாசினிஸ்ரீபிரியா
Comments (1)
Add Comment
  • vadivel

    Good Other links for articles and the best method