மீண்டும் ஒரு ஜமீன் பங்களா பேய்க்கதையாக ‘மங்களாபுரம்’..!

பேய்களுக்கும் ஜாமீன் பங்களாவுக்கும் அப்படி என்னதான் ஓட்டும் உறவும் தெரியவில்லை. கிராமத்து பேய்ப்படங்கள் என்றால் ஜமீன் பங்களா ஒன்று தவறாமல் வந்து விடும்.. அந்தவகையில் புதிதாக உருவாக்கி இருக்கும் படம் தான் மங்களாபுரம்’..

புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்யா ஷக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்யா ஷக்தி யார் ? இளம் காதலர்கள் வென்றார்களா ? அமானுஷ்யா ஷக்தி வென்றதா என்கிற பரபரப்பான திரைக்கதைதான் ‘மங்களாபுரம்’.

ஆர்.கோபால் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் யாகவன், சிவகுரு, இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக காயத்ரி ,கமலி,இருவரும் நடிக்கிறார்கள்.. மற்றும் அஜெய்ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெறும் அமானுஷ்ய கதையை மட்டுமே சொல்லி மிரட்டாமல், மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைத்தான் படத்தின் மையக்கருவாக வைத்துள்ளனர். படப்பிடிப்பு சென்னை காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது படம் இம்மாதம் வெளியாகிறது

ஆர்.கோபால்கமலிகாயத்ரிசிவகுருமங்களாபுரம்யாகவன்