மம்முட்டிக்கு வில்லனாக மாறிய ராம்கோபால் வர்மா சிஷ்யன்..!

 

சித்திக் இயக்கத்தில் தற்போது மம்முட்டி நடித்துவரும் படம் தான் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. ராப்பகல், தச்கர வீரன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தில் கல்ப் ரிட்டர்ன் மலையாளியாக நடித்திருக்கிறார் மம்முட்டி.. வீட்டிலேயே தரமான ஸ்வீட்களை தயார் செய்து விற்பனை செய்து, அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுபவராக நடித்திருக்கிறார் நயன்தாரா.

இந்தப்படத்தின் வில்லனாக, நயன்தாராவின் முன்னாள் காதலனாக நடிக்கிறார் ஜே.டி.சக்கரவர்த்தி. சிவா’, ‘சத்யா’, ‘பூத் ரிட்டர்ன்ஸ்’ என ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் ஆஸ்தான கதாநாயகனாக நடித்துவந்த இவர், கடந்த வருடங்களில் வெளியான ‘சமர்’ மற்றும் ‘அரிமா நம்பி’யில் வில்லனாக நடித்திருந்தார்.

‘பூத் ரிட்டர்ன்ஸ்’MamootyRam Gopal Varmaஅரிமா நம்பிசத்யாசிவாஜே.டி.சக்கரவர்த்திநயன்தாராபாஸ்கர் தி ராஸ்கல்மம்முட்டிராம்கோபால் வர்மா