மகேஷ்பாபுவை மகிழ்விக்க ‘ஆகடு’ தரும் ஆச்சர்யம்…!

படம் பாதி அளவுதான் வளர்ந்திருக்கிறது. ஆனால் இப்போதே படத்தின் வெளிநாட்டு உரிமை 6 கோடி ரூபாய்க்கு விலைபோயிருக்கிறது. இது குறித்து ஆச்சர்யப்பட தேவையில்லை.. காரணம் இது மகேஷ்பாபு படம்.. இதில் அதிசயம் எதுவும் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
அந்தப்படம் தான் ‘ஆகடு’….

இதுதான் தற்போது மகேஷ்பாபு தெலுங்கில் நடித்துவரும் படத்தின் பெயர். ‘ஒக்கடு’, ‘அத்தடு’, ‘தூக்குடு’ வரிசையில் அவருக்கு ஏற்ற ரைமிங்கான பெயர் ராசியுடன் அமைந்திருக்கும் படம். ‘தூக்குடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சீனு வைட்லாவும் மகேஷ்பாபுவும் இணைந்திருக்கும் படம்.. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘தூக்குடு’வை முடித்த கையோடு அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ‘பாட்ஷா’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, கொஞ்சம் கூட கம்பீரம் குறையாமல்தான் மீண்டும் மகேஷ்பாபுவுடன் கைகோர்த்திருக்கிறார் சீனு வைட்லா.

இந்தப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஃபைனான்சியர். இவர் இந்த ஏரியாவுக்கு புதியவர் என்பதால் படத்தை வேறு ஒருவருக்கு இன்னும் நல்ல விலைக்கு விற்றுவிடலாம்.. இல்லை அவரே ரிலீஸ் செய்தாலும் செய்யலாம். எது செய்தாலும் மகேஷ்பாபு மூலம் அவருக்கு கிடைக்கப்போவது லாபத்தை தவிர வேறு எதுவுமில்லை.

AagaduAthadhuDokkuduMahesh BabuOkkaduSreenu Vaitala
Comments (0)
Add Comment