‘மகாபலிபுரம்’ இப்போது ‘ஸ்டுடியோ 9’ கையில்..!


 இயக்குனர் டான் சாண்டி இயக்கிவரும் ‘மகாபலிபுரம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படத்தை ஸ்டுடியோ-9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.. படத்தை ஆகஸ்ட்டிலேயே வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.

பத்திரிகைகளில் தினசரி வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இந்தப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் டான் சாண்டி. இடைவேளை வரை காமெடியாக செல்லும் படம், இடைவேளைக்கு முன் த்ரில்லர் ரூட்டிற்கு மாறும் விதமாக கதை பின்னப்பட்டுள்ளதாம்.

‘வேட்டைக்காரன்’, ‘லீ’ ஆகிய படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்த விநாயக் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அங்கனா ராய், விருத்திகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ‘சூதுகவ்வும்’ கருணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அங்கனா ராய்மகாபலிபுரம்விநாயக்விருத்திகாஸ்டுடியோ 9