இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்து வரும் படம் மஹா. இந்த படம் ஹன்சிகாவின் 5௦வது படம் என்பது ஸ்பெஷல். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது இந்த போஸ்டரில் துறவி வேடம் ஒன்றில் நடிகை ஹன்சிகா புகை பிடிப்பது போன்று இடம்பெற்றிருந்ததால் அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இயக்குனர் மற்றும் ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில அமைப்பினர் காவல்துறையில் புகார் அளிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
இந்த போஸ்டரில் ஹன்சிகா தொழுவது போலவும் பின்னணியில் ஒரு பக்கம் மசூதியும் இன்னொரு பக்கம் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்வது போன்ற ஒரு நிழல் பிம்பமும் இதில் இடம்பெற்றிருக்கிறது இந்த போஸ்டர் என்ன விதமான சர்ச்சையை ஏற்படுத்த போகிறதோ என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்