ஆண்களையும் தூண்டிவிட்ட ‘மகளிர் மட்டும்’..!

மகளிர் மட்டும் கடந்த வெளிக்கிழமை வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மகளிர் மட்டும் வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் படம் பார்த்த 3000 பேருக்கு பட்டு சேலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு பெண்கள் தங்கள் தோழிகளை பேஸ்புக்கில் தேடி வருகிறார்கள்.

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தங்கள் நண்பர்களை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தேடி வருகிறார்கள். ஆண் என்ன, பெண் என்ன.. எல்லோருக்கும் பள்ளிப்பருவ நட்பை புதுப்பிக்க ஆர்வம் இருக்கும் தானே..? அந்தவகையில் தரமான படத்தை தயாரித்துள்ளதாக சூர்யா மற்றும் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இதேபோன்ற நல்ல படங்களை 2D நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தும் உள்ளனர். மகளிர்மட்டும் போன்ற நல்ல கதைகள் அமைந்தால் அடுத்த ஒரு தரமான படத்தை தயாரிக்கலாம் என்று எதிர்பார்த்துள்ளது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்…

BrammaJyothikaMagalirmattumபிரம்மாமகளிர் மட்டும்