சின்னித்திரை நாயகியாக இருந்து, கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த, ரத்னகுமார் என்பவர் இயக்கிய ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர்.. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், கார்த்தியின் ஜோடிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து, அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு பக்கம் ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ள படத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் பிரியா பவானிசங்கர்.