சமீபகாலமாக பணத்தையோ, அல்லது விலை உயர்ந்த பொருளையோ எதிரிகளிடம் பறிகொடுத்துவிட்டு அதை மீட்பதற்காக ஹீரோ கிளம்பும் கதைகள் நிறைய வர ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் அடுத்து வரவுள்ள படம் தான் மதுரை மா வேந்தர்கள்’.. இந்தப்படத்தை இயக்குபவர் விஜய் கண்ணா.. ‘நேற்று இன்று’, ‘இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களை பெரியளவில் வெளியிட்ட எஸ். தணிகைவேல் என்பவர் இந்தப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தன் மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை எப்படி கதாநாயகனும் அவனது நண்பர்களும் மீட்டெடுத்தார்கள் என்பதுதான் கதை. அஜய், அர்ச்சனா ஜோடியுடன் அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார் உட்பட பல நட்சத்திரங்கள் பங்குபெறுகின்றனர்.
இந்தப்படத்தின் படத்தில் பாடல் காட்சி கோவளம் கடற்கரையில் உள்ள ஒரு சிறு மணல் தீவில் படமாக்கப்பட்டபோது, படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, அலையின் வேகத்துக்கு படகு கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டதாம். அதன் பின் மீட்பு குழுவினர் வந்து படகை சரிசெய்து அனைவரையும் பத்திரமாக மீட்டனராம்