‘Happy New year’, ‘I love you’, ‘How are you’ என மனித உறவுகளை மேம்படுத்தும் பல சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத் தான் இருந்து வருகிறது அந்தவகையில் எஸ்.பி.பி.சரண் தனது கேபிடல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்திற்கும் ‘மூணே மூணு வார்த்தை’ என வித்தியாசமாக டைட்டில் வைத்திருக்கிறார்.
‘வல்லமை தாராயோ’, படத்தை இயக்கிய மதுமிதா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். காதல் கலந்த நகைச்சுவை படமான இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜுன் சிதம்பரம். ‘சுட்டகதை’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ படங்களில் நடித்த வெங்கடேஷ் ஹரிநாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ‘ர’ படத்தில் அறிமுகமான அதிதி செங்கப்பா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிககிறார்.
இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.பி.பி மற்றும் லட்சுமி இருவரும் நடிக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்தின் உதவியாளர் ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் ஒளிப்பதிவாளராகவும், கார்த்திகேய மூர்த்தி என்பவர் இசையமைப்பாளராகவும் இந்தப்படத்தில் அறிமுகம் ஆகின்றனர். இந்தப்படத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்காக போட்டி ஒன்றைஅறிவித்திருக்கிறார் மதுமிதா.. அப்படி என்ன போட்டி..?
“சமீப காலமாக, கல்லூரி மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்கள் படத்தின் மூலம் அவர்கள் தங்களது ‘மூணே மூணு வார்த்தை’ அனுபவத்தை வீடியோ பதிவாக அனுப்பினால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோக்கள் படத்தின் இறுதியில் காட்ட உள்ளோம். இவ்வீடியோ அவர்களின் காதல், கல்லூரி, நட்பு, நகைச்சுவை என அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை திரையுலகில் வாய்ப்புகள் அமைத்து தரவும் தயாராக உள்ளோம்” என்கிறார் இயக்குனர் மதுமிதா