“பீகாரில் பீடி குடித்தபடி இந்தி பேச என்னால் முடியும்” – மாதவன்..!

மாதவன் பேசும்போது அவரது பேச்சில் அறிவார்ந்த பல கருத்துக்கள் வெளிப்படுவது வாடிக்கைதான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசியபோது படிப்பதற்கும் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக கூறியுள்ளார். படபடவென்று ஆங்கிலத்தில் பேசி எதிரில் இருப்பவர்களுக்கு தான் ஒரு படித்தவன் என்பதை எளிதாக உணர்த்திவிட முடியும்.. அதைத்தான் இன்று இந்த சினிமா துறையில் பலரும் செய்துவருகிறார்கள்” என்கிறார் மாதவன்.

“ஆனால்.. கற்பது என்பது இதுவல்ல.. என்னை பீகாரில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டால் கூட, கோட் சூட் போட்டபடி அந்த இடத்தின் தரையில் அமர்ந்து ஒரு பீகாரியைப்போல பீடி குடித்தபடி, நம் இன்டஸ்ட்ரியில் உள்ளவர்களை விட நன்றாக இந்தியில் பேசமுடியும். இதுதான் நான் கற்றுக்கொண்டது” என்று கற்பதற்கும் படிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக விளக்குகிறார் மாதவன்.

மாதவன்