‘அழுத்த’மான பாடலை கொடுத்த மதன்கார்க்கி..!

அறிவியல் சம்பந்தமான வார்த்தைகளை வைத்து பாடல் வேண்டுமென்றால் அடுத்த நிமிடம் நமது இயக்குனர்கள் உடனே தட்டுவது மதன் கார்க்கியின் வீட்டுகதவைத்தான். அந்த அளவுக்கு அறிவியல் பூர்வமான வார்த்தைகளை கோர்த்து உடனே ஒரு பாமாலையை தயார் செய்துவிடும் வல்லமை படைத்தவர் தான் மதன் கார்க்கி.

அந்தவகையில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்திற்காக இப்படி ஒரு பாடல் தேவைப்பட உடனே மதன் கார்க்கியிடம் ஓடியிருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ்.. கார்க்கியிடம் இரண்டே நிமிடங்களில் கதை சொல்ல, கார்க்கிக்கோ மொழிகளை மையப்படுத்தலாமா? எண், எழுத்து என்று பட்டியலிடலாமா? ஒன்று, இரண்டு மூன்று என்று எதையாவது வரிசைப் படுத்தலாமா? என யோசனைகள் ஓட ஆரம்பித்ததாம்.

மடிக்கணினியை வைத்துக்கொண்டு ‘எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்’ என யோசித்தவருக்கு சட்டென்று ஐடியா க்ளிக்’காகவே, “அலைவரிசை மாற்றவே தொலை இயக்கி அழுத்தவும்! தலை எழுத்தை மாற்றவே – உன் மூளையை நீ அழுத்தவும்! என வரிசையாக ‘அழுத்தவும்’ என முடிகிற மாதிரி பாடலாக போட்டுத்தர இசையமைப்பாளர் அதற்கு அற்புதமாக ட்யூன் போட்டுவிட்டாராம்.

இந்தப்படத்தில் நகுலும் அட்டகத்தி’ தினேஷும் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நடிக்கிறார் பிந்துமாதவி. எதிர்நீச்சல் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூமியை நோக்கிவரும் காந்தப்புயலால் தகவல் தொழில்நுட்பமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்கிற புதுமையான கதைக்களத்தை இந்தப்படத்திற்காக எடுத்துள்ளார் இயக்குனர் ராம்பிரகாஷ்.

அட்டகத்திசதீஷ்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்தினேஷும்பிந்துமாதவிமதன்கார்க்கிராம்பிரகாஷ்.