மதன் கார்க்கி கைவண்ணத்தில் தமிழ்பேசும் காயம்குளம் கொச்சுன்னி

மற்ற மொழியில் உருவாகும் படங்களை அதன் இயல்புத்தன்மை கெடாமல் தமிழ் ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்றால் அதில் வசனங்களின் பங்கு மிக முக்கியம்.. நேரடி மற்றும் புத்தம் புதிய ஸ்கிரிப்ட்க்கு வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக இருக்கும்போது, அதுவும் டப்பிங் பதிப்புகளுக்கு எழுதுவது எப்படி இருக்கும்.அந்தவகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி அனைத்து சாரங்களிலும் பாடல் வரிகள் எழுதுவதில் மட்டுமல்ல, வசனம் எழுதுவதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

அந்த வகையில், மதன் கார்க்கி பாகுபலி படங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கும் வசனம் எழுதியவர், அடுத்ததாக நிவின் பாலியின் பிரமாண்டமான மலையாள திரைப்படமான ‘காயம்குளம் கொச்சுன்னி’ படத்திற்கு வசனம் எழுதி வருகிறார். 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.

நிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ஒரு கூடுதல் ஈர்ப்பு ஆகும்.

படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, “இந்த படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதை கையாள முடிவு செய்தோம். இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் ஒரு மொழி மாற்று திரைப்படத்தை பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் ஒரு பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

36 வயதினிலே படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ள மதன் கார்க்கி, இந்த படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘மலைக்கள்ளன்’ என்ற தலைப்பை வைக்க நினைத்ததாக கூறினார். இருப்பினும், இந்த தலைப்புக்கான உரிமையை படக்குழு முறைப்படி பெற்றால் தான் வைக்க முடியும் அல்லது வேறு ஒரு புதிய தலைப்பு வைக்கப்படும்.

KayamKulam KochunniMadhan Karkyகாயம்குளம் கொச்சுன்னிசன்னி வேன்நிவின் பாலிபாபு ஆண்டனிபிரியங்கா திம்மேஷ்பிரியா ஆனந்த்மதன் கார்க்கி