விஷாலின் முடிவை மாற்றுவாரா எம்.ஜி.ஆர்..?

எப்போதுமே படத்தை ரிலீஸ் சேயும் விஷயத்தில் சொல்லி அடிக்கும் கில்லியான விஷால், தான் நடித்துள்ள ‘மருது’ படத்தை மே-20 ஆம் தேதி வெளியிடுவதாக முடிவு செய்திருந்தார்… மத கஜ ராஜாவுக்குப்பின் வந்த விஷால் படங்கள் அனைத்துக்கும் ஒரே ஒருமுறை மட்டுமே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அந்த தேதியில் சொன்னபடி ரிலீசாகியும் வந்துள்ளன..

அதனால் ‘மருது’ தேதியிலும் மாற்றம் இருக்காது. என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இந்தவேளையில் அவ்வப்போது ரிலீஸ் தேதி அறிவ்க்கப்படுவதும் பின்னர் தள்ளிப்போவதுமாக போக்கு காட்டிக்கொண்டிருந்த மதகஜராஜா (எம்.ஜி.ஆர்) படத்தை மே-13ல் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்கள். முந்தைய முறை போல் அல்லாமல் இந்தமுறை உறுதியாக வெளியிட்டு விடுவார்கள் என்றே சொல்லப்படுகிறது.

அப்படியானால் தான் நடித்துள்ள ‘மருது’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் மாற்றித்தானே ஆகவேண்டும். ‘மத கஜ ராஜா’ படம் சுந்தர்.சி டைரக்சன் என்பதாலும், அதனால் படம் குறைந்தத இரண்டு வாரத்துக்காவது தியேட்டர்களில் நின்று விளையாடும் என்பதாலும் தனது இன்னொரு படத்தை உடனே ரிலீஸ் செய்து இரண்டு படங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்க விஷால் விரும்புவாரா என்ன..? அதற்கேற்ற மாதிரி தானே இப்போதுகூட ‘மருது’ பட போஸ்டர்களில் ‘விரைவில்’ என்று மட்டுமே தேதி குறிப்பிடாமல் விளம்பரப்படுத்தி வருகிறார் விஷால்.

MadhGajaRajaSundhar CVishalசுந்தர்.சிமதகஜராஜாவிஷால்