பாலாஜி மோகன் டைரக்சனில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்துவரும் ‘மாரி’ படத்தின் ஆடியோ ரிலீசுக்கான வேலைகள் விறுவிறுப்ப்பாக நடைபெற்று வருகின்றன. அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-4ஆம் தேதி ஆடியோ ரிலீசை நடத்த முடிவு செய்துள்ளனர்..
அதன் முதற்கட்டமாக இன்று மாலை இந்தப்படத்தின் டீசரை வெளியிடுகின்றனர். தனுஷ் – அனிருத் காம்பினேஷன் ஹிட் பற்றி நாம் விளக்கம் கொடுக்க தேவையில்லை.. படத்தின் பாடல்கள் கொடுத்த உற்சாகத்தில் தனுஷ் சில சாம்பிள் வரிகளை மட்டும் நமக்காக கொடுத்திருக்கிறார்.. முணுமுணுத்து பாருங்களேன்.
.
மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா…
மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா..?
மாரி… கொஞ்சம் நல்ல மாறி…ரொம்ப வேற மாறி..
மாரி… தேச்சா தங்கம் மாறி…மொறச்சா சிங்கம் மாறி…