‘மாரி’ மூலம் தனுஷுக்கு கிடைத்த 61 வயது தம்பி..!

இன்று தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ படம் போட்டி ஏதுமின்றி சிங்கிள் சிங்கமாக ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தை பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளாராம் பாலாஜி மோகன். எந்த அளவுக்கு என்றால் இனி பாலாஜி மோகனால் கமர்ஷியல் படங்களை மட்டுமே இயக்கமுடியும் என்கிற அளவுக்காம். இது தனுஷே நேற்று ‘மாரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னது.

இந்தப்படத்தை தயாரித்துள்ள சரத்குமார் நேற்று கையில் அடிபட்டு பேண்டேஜ் போட்டுக்கொண்டு வலியுடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். தனுஷ் நடித்த படத்தை தயாரித்ததை விட, அவரது படத்தில் அவருடன் இணைந்து நடிப்பதற்காக தயாராகி வருகிறேன்” என்றார் சரத்குமார்.

தனுஷ் பேசும்போது சரத்குமாரை பற்றி குறிப்பிடுகையில், “சரத் சார் எப்போதுமே அவரை தம்பி என அழைக்கும்படி தான் சொல்வார்.. ஆரம்பத்தில் என்னடா இப்படி சொல்கிறாரே என்று நினைத்தேன்.. ஆனால் அவரது பேச்சும் செயலும் என்னை மாதிரி யூத்துகளை விட இளமையாக இருக்கின்றன”” என கூறினார்.

சரத்குமார்தனுஷ்பாலாஜி மோகன்மாரி