பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட செட்டில் ‘மான் கராத்தே’ க்ளைமாக்ஸ்

சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா ஜோடியாக நடித்துவரும் ‘மான்கராத்தே’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுத, அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்குவதற்காக மிகப்பெரிய அரங்கம் ஒன்றை நிர்மாணித்திருக்கிறார் இந்தப்படத்தின் மூலம் ஆர்ட் டைரக்டராக அறிமுகமாகியுள்ள ராஜா முருகன்.

எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஹிட் பாடல்களை தந்த அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். நாசரும், ‘துப்பாக்கி’ வில்லன் வித்யுத் ஜாம்வாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகாதஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

Maan Karateமான் கராத்தே
Comments (0)
Add Comment