‘மாலை நேரத்து மயக்கம்’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..!

விறுவிறுப்பான படத்தொகுப்பிற்கு சொந்தக்காரரான கோலா பாஸ்கர் இப்போது ‘மாலை நேரத்து மயக்கம்’ படம் மூலம் ஒரு பரபரப்பான தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.. இந்தப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ளார். உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் நாயகனாக பாலகிருஷ்ணா கோலா நடித்துள்ளார். இந்தப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு நேற்று லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ‘ஓவேஷன்ஸ்’ எனப்படும் கல்லூரி கலை விழாவில் வைத்து நடைபெற்றது.. இதில் தான் இந்தப்படத்திற்காக இசையமைத்த ‘சரக்க’ என்கிற பாடலை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார் இசையமைப்பாளர் அம்ரித்.

மாலை நேரத்து மயக்கம்