சிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..!

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில்,“நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர். படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை.” என்றார்.

இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில்,“மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

நடிகர் சௌந்தர் பேசுகையில்.“நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை.படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன்.போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா?பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம். மாயன் ஒரு ஃபேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வது தான் மாயன்.

சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார். நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

MaayanSoundarசெளந்தர்மாயன்