பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்..!


தமிழ்சினிமாவுக்கு அடுத்தடுத்து தொடர் இழப்புகள் ஏற்பட்டு வருவது வருத்தமளிக்கும் விஷயம்.. பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவரும் சூழலில் நேற்று இன்னொரு பாடலாசிரியரான அண்ணாமலை ஹார்ட் அட்டாக்கில் திடீரென மரணத்தை தழுவியுள்ளது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐம்பதே வயதான பாடலாசிரியர் அண்ணாமலை, பிறந்த ஊர் திருவண்ணாமலை. பள்ளி நாட்களில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை உயிராக நேசித்தார். எனவே, அவர் படித்த சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். இயக்குனர் செல்வா இயக்கிய ‘சித்திரப் பாவை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன் முதலில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் வாய்ப்பு கிடைத்து சில படங்களுக்கு பாடல் எழுதி வந்த அண்ணாமலையை, ‘வேட்டைக்காரன்’ படத்தில் வந்த ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 50 படங்களுக்கு எழுதி இருக்கிறார். தற்போது 20 படங்களில் எழுதி வந்தார்..

கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணிபுரிந்த இவர், கடைசியாக ஜூனியர் விகடன் இதழில் 5 ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்தார். பாடல் எழுதும் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பொருட்டு, சில மாதங்கள் முன்பு அந்தப் பணியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

AnnamalaiLyrics Writterஅண்ணாமலை