கடந்த 25ஆம் தேதி நியூஸ் 18 தமிழ் சேனலில் காலத்தின் குரல் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் லைகா நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசினார் என்று சொல்லப்படுகிறது..
இதை தொடர்ந்து நேற்று லைகா நிறுவனத்தினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வேல்முருகன் மீது பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் லைகா நிறுவனத்தின் டைரக்டர் நீலகண்ட் நாராயண்பூர்…
லைகா நிறுவனம் இலங்கையில் வரும் ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்திருந்த இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் ரஜினியை கலந்துகொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியதில் வேல்முருகனுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.