மைசூரில் இன்று காலை பூஜையுடன் தொடங்கியது ‘லிங்கா’..!

இது ரஜினியின் திரையுலக வாழ்க்கையில், கடந்த 20 வருடங்களில் னிகழும் அதிசயமான நிகழ்வு.. காரணம் ஒரு படம் வெளியாகி அதற்கு வெற்றிவிழா கொண்டாடிவிட்டுத்தான் தனது அடுத்த படத்தையே அறிவிப்பார் ரஜினி. ஆனால் இந்தமுறை ‘கோச்சடையான்’ ரிலீஸாக இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையில் தனது அடுத்த ஆட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார் சூப்பர்ஸ்டார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் பூஜை இன்று காலை மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் வைத்து மிக எளிமையாக நடந்தது. பட்டுவேட்டி, சட்டை சகிதமாக ரஜினி, கே.எஸ். ரவிகுமார் கலந்துகொண்டனர்.

முறுக்கு மீசையும் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் பார்ப்பதற்கே புதுவிதமான தோற்றத்தில் காட்சியளித்தார் சூப்பர்ஸ்டார். இந்த நிகழ்வில் ரஜினியின் நண்பரும் கன்னட நடிகருமான அம்பரீஷும் அவரது மனைவியும் நடிகையுமான சுமலதாவும் கலந்துகொண்டார்கள்.

AnuskhaK S RavikumarLingaaRajinikanthகே.எஸ்.ரவிகுமார்கோச்சடையான்ரஜினி