படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் கூட ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்களின் நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பான பிரச்சனை அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாகத்தான் இருக்கிறது. மீண்டும் தற்போது பிரச்சனை எழுந்துள்ள நிலையில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை விளக்கினார்.
அதில் ராக்லைன் வெங்கடேஷ் 12.5 கோடி தருவதாக ஒப்புக்கொண்டு அதில் ஆறு கோடி ரூபாயை கொடுத்தும் விட்டார் என்றும் அதை பாதி பேருக்கு பிரித்து கொடுத்து விட்டோம் என்றும் சுப்பிரமணி கூறினார். மேலும் தற்போது ராக்லைன் வெங்கடேஷ் தனது மகளின் திருமண காரியங்களில் மும்முரமாக இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்குள் மீதி பணத்தையும் கொடுத்து விடுவதாக சொல்லியுள்ளாராம்.
அதனல் இன்னும் இரண்டு நாட்களில் லிங்கா தொடர்பான பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு விடுமாம். ஒருசிலர் தான் வேண்டும் என்றே ரஜினிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பேச்சை நம்பவேண்டாம் என்றும் திருப்பூர் சுப்பிரமணி கூறினார். இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணுவும் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் உடன் இருந்தனர்.