‘லிங்கா’வுக்கு ‘U’ சான்றிதழ்..! ரஜினி பிறந்தநாளில் மெகா ரிலீஸ்..!

 

வழக்கமான தீபாவளியுடன், மேமாதம் வெளியான ‘கோச்சடையான்’ மற்றும் இதோ சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர்-12ல் வெளியாகவிருக்கும் ‘லிங்கா’ இரண்டும் சேர்ந்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த வருடம் மூன்று தீபாவளி என்று சொல்லவைத்துவிட்டன.

ஆம். ‘லிங்கா’ டிசம்பர்-12ல் ரிலீசாவது உறுதியாகிவிட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு  ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியின் அனிமேஷன் உருவத்தை மட்டுமே பார்த்து சற்றே ஏமாற்றத்தில் இருந்த ரஜினி ரசிகர்கள், இந்தவருடம் அவரது பிறந்தநாளை ‘லிங்கா’வுடன் சேர்த்து கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

ரஜினி இரண்டு வேடங்களில் நடிப்பது தொடர்ச்சியாக இது மூன்றாவது முறை.. அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா இருவரும் ஜோடியாக நடிக்க யூத் ஐகான்களான சந்தானம், கருணாகரன் இருவருடனும் சேர்ந்து படு யூத்தாக இறங்கி அடித்திருக்கிறார் சூப்பர்ஸ்டார். அந்தவகையில் ‘படையப்பா’ வெளியாகி 15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு சரித்திர வெற்றியை ருசிக்க தயாராக உள்ளது ரஜினி – கே.எஸ்.ரவிகுமார் கூட்டணி.

அனுஷ்காகருணாகரன்கே.எஸ்.ரவிகுமார்சந்தானம்சோனாக்ஷி சின்ஹாபடையப்பாரஜினிலிங்கா