“மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆசை” – விருப்பத்தை வெளிப்படுத்திய சூர்யா


லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள அஞ்சான் திரைப்படம் வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்திருக்கின்றன. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன் தினம் கொச்சியில் உள்ள கோகுலம் பார்க்கில் நடைபெற்றது.

விழாவில் பேசிய சூர்யா, தான் மோகன்லாலின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதற்கான தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த விழாவில் சூர்யாவுடன் இயக்குனர் லிங்குசாமி, யுடிவி தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.. கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் செலவில் ‘அஞ்சான்’ உருவாகியுள்ளது.

 

AnjaanLingusamyMohanlalSuryaஅஞ்சான்கோகுலம் பார்சூர்யாலிங்குசாமி