‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதியால் கிடைத்த வாழ்வு..!

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. இயக்குநர் அஸ்லாம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..

இன்றைய சூழலில் சின பட்ஜெட் படங்கள் என்னதான் நல்ல கதையம்சத்துடன் உருவாகி இருந்தாலும், அவற்றை நல்லபடியாக புரமோட் செய்து, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து மக்கள் மத்தியில் கொண்டுபோக ரசிகர்கள் அறிந்த ஒரு முகமோ அல்லது நிறுவனமோ அந்தப்படத்தின் வியாபாரத்தில் இணையவேண்டும்..

அந்தவகையில் இந்தப்படத்தை பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்த உதயநிதிக்கு இந்தப்படம் ரொம்பவே பிடித்துப்போனது.. அதுவே இந்தப்படத்திற்கு வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளது.. இனி இந்த குப்பையும் கோபுரம் ஏறும் என்கிற நம்பிக்கை படக்குழுவினருக்கு வந்துள்ளதாம்.

அஸ்லாம்உதயநிதிஒரு குப்பை கதைகாளி ரங்கசாமிதினேஷ்ரெட் ஜெயண்ட் மூவிஸ்