இலவச பள்ளிக்கூட்டம் கட்டும் வேலையை துவக்கினார் லாரன்ஸ்..!

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதிய முயற்சிக்கு அச்சாரம் போடுவது வழக்கம் ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் அதில் கூட வித்தியாச சிந்தனையும் சமூக நோக்கும் இருக்குமாறு பர்த்துக்கொண்டுள்ளார். ஆம்.. ஏழை மாணவர்களின் படிப்புக்காக இலவச பள்ளி கட்டும் பணியை தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று துவங்கி இருக்கிறார் லாரன்ஸ்.
தனது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியும் தானே… ஒவ்வொரு வருடமும் தனது டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பேசாமால் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியதால் பள்ளிக்கூடம் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டார் லாரன்ஸ்…

தனது டிரஸ்ட்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார் லாரன்ஸ். அந்த இடத்தில் தான் பள்ளிக்கூடம் கட்ட இருக்கிறார். ப்ரீகேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும் இந்த பள்ளியை இன்னும் வசதி வரும்போது பிளஸ்-2 வரை விரிவுபடுத்த உள்ளார் ராகவா லாரன்ஸ்.

அதுமட்டுமல்ல, இவர் ஒரு டான்ஸ் ஹீரோ என்பதால் எல்லா நாட்டிலிருந்தும் நட்சத்திர கலை விழா நடத்த அழைப்புகள் வந்தது. இவரது நடனத்திற்கு உலக நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு ஆனால் எல்லாவற்றையும் மறுத்து வந்த லாரன்ஸ், இந்த பள்ளிக்கூட நிதிக்காக முதன் முறையாக நட்சத்திர கலை விழாவும் நடத்த உள்ளார்.

“நான் தான் சரியாக படிக்கல.. படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்கிறார் ராகவா லாரன்ஸ். ஆலயம் ஆயிரம் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது என்பார்கள். லாரன்ஸ் இரண்டையுமே கட்டுகிறார் என்பதுதான் சிறப்பே.

Lawrenceலாரன்ஸ்