அன்னைக்கு கோயில் கட்ட நாளை அடித்தளம் அமைக்கிறார் லாரன்ஸ்..!

காஞ்சனா-2 வெற்றி தரும் சந்தோஷத்தை விட ராகவா லாரன்ஸுக்கு சந்தோசம் தரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று ராகவேந்திரர்.. இநோன்று அவரது அம்மா.. தற்போது தனது அன்னைக்கு கோவில் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் லாரன்ஸ்.

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் எதிலுமே வித்தியாசமானவர்.. அது தான் பெறாத குழந்தைகளின் மேல் பாசத்தை காட்டுவதாக இருந்தாலும் சரி.. தன்னைபெற்ற தாயின் மீது அன்பு செலுத்துவதாக இருந்தாலும் சரி.. அதுதான் இப்போது அவரது தாய்க்காக கோவில் கட்டும் அளவுக்கு அவரை உந்தித்தள்ளியிருக்கிறது.

“என் தாய் மட்டும் இல்லை என்றால் நான் இறந்த இடத்தில் எப்போதோ புல் முளைத்திருக்கும் எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். அந்த தாய்க்கு அவர் வாழும்போதே கோயில் கட்டி பெருமை படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை” என்கிறார் லாரன்ஸ்.

இதற்காக அவரது தாயாரின் உருவச்சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார். தான் ஏற்கனவே கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகேயே கோயில் கட்ட, அன்னையர் தினமான நாளை அடித்தளத்தை அமைக்கிறார். உலகிலேயே வாழும் தாய்க்கு கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா-2ராகவா லாரன்ஸ்