தமன்னாவை வேண்டாம் என சொன்னாலும் சொல்வாரே தவிர இசையமைப்பாளர் தமன்னை விடாமல் உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.. ஆம்.. தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துவரும் ‘சிவலிங்கா’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன்..
இந்தநிலையில் இந்தப்படத்தில் பாடலாசிரியர் விவேகா எழுதிய பாடல் ஒன்றை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என பி.வாசு, தமன், லாரன்ஸ் ஆகிய மூவருக்குமே ஒரு மனதாக தோன்றியுள்ளது. உடனே அனிருத்தை அழைக்க, அவரும் சம்மதம் சொல்லி பாடியும் கொடுத்துவிட்டார்.. இந்தப்பாடல் பக்கா மாஸ் ஆக இருக்கும் என்கிறார் லாரன்ஸ்.