தாய்க்கு கோவில் கட்டுகிறார் லாரன்ஸ்..!

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் எதிலுமே வித்தியாசமானவர்.. அது தான் பெறாத குழந்தைகளின் மேல் பாசத்தை காட்டுவதாக இருந்தாலும் சரி.. தன்னைபெற்ற தாயின் மீது அன்பு செலுத்துவதாக இருந்தாலும் சரி.. அதுதான் இப்போது அவரது தாய்க்காக கோவில் கட்டும் அளவுக்கு அவரை உந்தித்தள்ளியிருக்கிறது.

தனது பிறந்த நாளான இன்று தனது தாய் கண்மணிக்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். இதற்காக அவரது தாயாரின் உருவச்சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார்.

என் தாய் மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும் எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். அந்த தாய்க்கு அவர் வாழும்போதே கோயில் கட்டி பெருமை படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை” என்கிறார் லாரன்ஸ்.

மேலும் அவரது தாய் லாரன்ஸை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக தொகுத்து, அடுத்த வருடம் அவரது பிறந்தநாளன இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளாராம் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ்லாரன்ஸ்