கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் புயல் சேத அளவைக்கண்டு அதிர்ந்து போனார்.
‘நாம் சென்னையில் கேள்விப்பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப் பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்.. நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு…
அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.. அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வரவேண்டும். இது தான் என் தாழ்மையான வேண்டுகோள்..” என ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..