கோச்சடையான் படம் தயாரிப்பு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் வழக்கில் லதா ரஜினிகாந்தின் பெயரும் பல நாட்களாக அடிபட்டு வந்தது. ஆனால் சில நாட்களாக அமுங்கிகிடந்த விவகாரத்தில் ஒரு திருப்பமாக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அவர் மீது எப்.ஐ.ஆர் பதியும் அளவுக்கு நிலைமை தற்போது சீரியஸாகி உள்ளது.
ஆனால் இது குறித்து இன்று லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்ட பீரோ நிறுவனம் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனது பெயருக்கும் எனது குடும்பத்தினருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அபிர்சந்தும் சஞ்சல் நஹரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். தவறான எண்ணத்துடன் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படும் அவர்களை சட்டப்படி எதிர்கொள்வேன்” என கூறியுள்ளார்.