இயக்குநர் இமயம்” பாரதிராஜா – விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறாராம் நித்திலன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் டெல்னா டேவிஸ் மலையாள திரையுலகை சேர்ந்தவர்.
ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம், அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறதாம். சென்னையை சுற்றியே நகரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்துள்ளதாம்.. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளை மாலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.