மம்முட்டியால் விதார்த் படத்திற்கு கிடைத்த கெளரவம்..!

நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விதார்த், அடுத்ததாக நடித்துள்ள படம் தான் ‘குரங்கு பொம்மை.. இந்தப்பத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா விதார்த்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார்.

இயக்குனர் நித்திலன் இயக்குனர் ராமை அணுகி தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை மம்முட்டியை வைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைக்க, இதை தான் இயக்கிவரும் ‘பேரன்பு’ படத்தில் நடித்துவரும் மம்முட்டியிடம் சொல்லியிருக்கிறார் ராம்.. மம்முட்டியும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டதுடன் நேற்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ‘குரங்கு பொம்மை’ டீமை கௌரவப்படுத்தியுள்ளார்.

Kurangu BommaiMamootyகுரங்கு பொம்மைமம்முட்டிவிதார்த்