தேவி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவா கதாநாயகனாக நடித்துவரும் படம் பெயர் ‘யங் மங் சங்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் கேத்தரின் தெரசா. முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜூன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் உருவாகி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக பிரபுதேவா முதல்முறையாக எழுதிய பாடலான “அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவானது.
சங்கர்மகாதேவன் குரலில் பதிவான இந்தப் பாடல் தற்போது கும்பகோணத்தில் 15௦ நடன கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது.. பிரபுதேவா நடனம் என்றாலே பரபரப்பாக இருக்கும் அதிலும் 150 நடன கலைஞர்களுடன் அவர் ஆடினால் கேட்கவா வேண்டும்.. ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்களாம்.