இணையத் திருட்டிற்கு சவால் விடும் “கிரிஷ்ணம்”!

வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பாக உருவாகிறது ‘கிரிஷ்ணம்’ என்கிற படம். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விறுவிறுப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.

உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.

இந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Krishanmஐஸ்வர்யா உல்லாஸ்கிரிஷ்ணம்சாந்தி கிருஷ்ணாசாய் குமார்தினேஷ் பாபுமமிதா பைஜுரெஞ்சி பனிக்கர்