மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியரும் இயக்குனருமான யுரேகா.. தற்போது ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மத்திய சென்னை படத்தில் நடித்த ஜெய்வந்த் இந்தப்படத்தின் கதாநாயகனாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அதிரடி போலீஸ் கதையாகவும் சைக்கோ த்ரில்லர் கதையாகவும், அதேசமயம் வடமநிலத்தவர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் எப்படி பொருளாதார தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தமிழக ராசியும் மத்திய அரசியும் வசைபாடிய கௌதமன், டாஸ்மாக்கை நடத்தி மக்களை சீரழித்து அந்த வரிப்பணத்தில் அரசாங்கத்தை நடத்துவதை விட, பேசாமல் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி அதில் வரும் வருவாயை வைத்து ஆட்சி நடத்தலாம்” என தமிழக அரசுக்கு காட்டமாக ஆலோசனை சொன்னார்.