கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025! – அக்டோபர் 25, 26 இரு தினங்கள் நடைபெறுகிறது

பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் ’கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025’ வரும் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களில், இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக நடைபெற உள்ளது.

விழாவின் சிறப்பம்சங்கள் ;

நேரடி இசை நிகழ்ச்சி :

பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை :

தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து தனது சிரிப்பு பட்டாசால் அரங்கை அதிரவைக்க போகிறார்.

சர்வதேச காத்தாடி திருவிழா :

கோவையில் முதன்முறையாக நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழா வண்ணமயமான காத்தாடிகள் வானத்தையும் நம் உள்ளத்தையும் பண்டிகை நிறத்தில் மாற்றவுள்ளது.

உணவு விழா :

கொங்குநாட்டின் பாரம்பரிய சுவைகள் மற்றும் சிறப்பு திருவிழா உணவுகள்.

ஷாப்பிங் ஸ்டால்கள் :

உள்ளூர் கைவினைப்பொருட்கள், பிராண்டுகள் மற்றும் தனித்துவமான பொருட்கள்.

விழா விளையாட்டுகள் & அலங்காரம் :

பண்டிகை உற்சாகத்தை மேலும் உயர்த்தும் சிறப்பு அலங்காரம் மற்றும் விளையாட்டுகள்.

விழா ஏற்பாட்டாளர் :

ரியல் எஸ்டேட் மற்றும் சமூக மேம்பாட்டில் முன்னணி நிறுவனமான – NV LANDS

விழா பற்றி மேலும் அறிய மற்றும் பங்கேற்பதற்கு:

மின்னஞ்சல்: enquiry@nvlands.com
தொலைபேசி: +91-89258 86287

கொங்குநாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சிறப்பிக்கும் இந்த மாபெரும் திருவிழாவை தவறவிடாதீர்கள்!

அக்டோபர் 25 & 26, 2025

உங்கள் குடும்பத்துடன் பல்லடம், கிளாசிக் சிட்டியில் கலந்துக்கொண்டு உங்கள் தீபாவளியை கோலாகலமாக்குங்கள்..

Andreakongunaadu deepawali festival 2025ஆண்ட்ரியா பங்கேற்கும் கொங்குநாடு தீபாவளி திருவிழாகொங்குநாடு தீபாவளி திருவிழா 2025